எதிர்வரும் நாட்களில் எரிப்பொருட்களின் விலையும் அதிகரிக்கும் சாத்தியம்!


நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட வேண்டிய நிலை ஏற்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.


இந்த ஆண்டு ஓகஸ்ட் 31 ஆம் திகதிக்குள், இலங்கை பெட்ரோலியம் கூட்டுத்தாபனம் 70 பில்லியன் ரூபாய் இழப்பைச் சந்தித்துள்ளதாக தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.


இந்த இழப்பை ஈடுசெய்யும் வகையில் எதிர்வரும் நாட்களில் எரிப்பொருட்களின் விலையும் உயர்வடையலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


மேலும் இந்த விடயம் குறித்து அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

No comments: