சுவிஸில் வசிக்கு இலங்கையர் கொரோனாவினால் உயிரிழப்பு - உறுதிப்படுத்தியது வெளிவிவகார அமைச்சு

சுவிட்சர்லாந்தில் வசிக்கும் 59 வயதுடைய இலங்கையைச் சேர்ந்த ஒருவர் மார்ச் 25 ஆம் திகதி கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உயிரிழந்தார் என சுவிஸ் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர் என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

தொழில்நிமித்தம் சுவிட்ஸர்லாந்துக்கு சென்ற இவர் கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை இதில் புங்குடுதீவைச் சேர்ந்த 61 வயதுடைய லோகநாதன் என்பவர் என நேற்று சில தமிழ் ஊடகங்களில் தவறான தகவல்களுடன் செய்திகள் வெளியானமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments