இலங்கையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50 ஆக அதிகரிப்பு

மேலும் 8 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

தற்போது இடம்பெற்றுவரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள மத்திய நிலையத்தின் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டுள்ள அமைச்சர் இதனை தெரிவித்தார்.

அதன்படி, 50 பேர் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருவதாக பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

மேலும், கொரோனா தொற்று அறிகுறிகளுடன் 212 பேர் நாடளாவிய ரீதியில் பல வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டுவருவதாகவும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

No comments: