வடக்கு மாகாணத்தில் ஊரடங்குச் சட்டம் நீடிப்பு - முக்கிய அறிவிப்பு

வடக்கு மாகாணத்தில் உள்ள  5 மாவட்டங்களுக்கும் எதிர்வரும் 24ஆம் திகதி காலை 6 மணி வரை ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் எதிர்வரும் 24ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 6 மணி வரை ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வடக்கு மாவட்டங்களில் உள்ளவர்கள் அடுத்தடுத்த மாவட்டங்களுக்குச் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த மாவட்டங்களில் காலை 6 மணிக்கு நீக்கப்படும் ஊடரங்கு சட்டம் மீண்டும் அன்றைய தினமே 2 மணிக்கு ஊரடங்கு அமுலாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments