மகிழ்ச்சியான தகவல்: கடந்த 24 மணிநேரத்தில் எவரும் பாதிக்கப்பட்டதாக அறியப்படவில்லை..!

கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் எவரும் பாதிக்கப்பட்டதாக அறியப்படவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 106 ஆக அதிகரித்துள்ளதுடன் அதில் 07 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர்.

அத்துடன், 237 பேர் நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதார மேம்பாட்டு பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை கொரோனா தொற்று அறிகுறிகளுடன் சுவிஸ் மற்றும் பிரான்ஸில் இரண்டு இலங்கையர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments