பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 289 ஆக உயர்ந்துள்ளதுடன் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் நோயாளார்களின் எண்ணிக்கை 5,837 ஐ எட்டியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 154 புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் தலைநகர் லண்டனில் கொரோனா வைரஸ் நோயாளார்களின் எண்ணிக்கை 2,189 ஆகக் காணப்படும் நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100 ஆக உள்ளது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிராக அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் லண்டனில் அத்தியாவசியமற்ற பயணங்களை மேற்கொள்ளவேண்டாம் என அரசாங்கத்தினால் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
சமூகங்களுக்கிடையிலான இடைவெளியைப் பேணுவற்காக மக்களைப் பொது இடங்களுக்குச் செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பூங்காக்கள், தேநீர் நிலையங்கள், மதுச்சாலைகள், இரவுவிடுதிகள், உணவகங்கள், சினிமா திரை அரங்குகள் முதலான அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
0 Comments