கொரோனா வைரஸ் தொற்றாளருடன் இருந்த வெளிநாட்டவர் மாயம்: இவரை கண்டால் உடன் அறிவியுங்கள்

அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர் ஒருவருடன் கொழும்பு 7 உணவகம் ஒன்றில் ஒன்றாக இருந்த பிரான்ஸ் நாட்டவர் ஒருவர் மாயமாகியுள்ளார்.

இந் நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உள்ளத இல்லையா என்பதை உறுதி செய்யவும் அவரை தனிமைப்படுத்தல் மற்றும் தொற்று நீக்கல் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தவும்  பொலிஸார் தேடி வருவதாக  பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

நேற்று மாலை , ராஜகிரியவில் உள்ள  கொரோனா தொற்று பரவலை தடுக்கும் தேசிய நடவடிக்கை மையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் , குறித்த வெளிநாட்டவரின் புகைப்படத்தையும் காண்பித்து இந்த தகவலை வெளியிட்டார்.

எனவே அந்த நபரை அடையாளம் கண்டால், அல்லது அவர் தொடர்பில் தகவல் தெரிந்தால் உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்குமாறும் அவர் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments: