ஊரடங்கின்போது ஒரு பிரதேசத்தில் ஒரு வங்கியாவது செயற்பட வேண்டும்...!

சுகாதார துறையினரது ஆலோசனைகளை ஏற்றுக் கொண்டுள்ள நிலையில் தேசிய பொருளாதாரத்தையும் பலப்படுத்துவதற்கு கவனம் செலுத்த வேண்டும் என முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அத்தியாவசிய சேவை தொடர்பான ஜனாதிபதி செயலணி கூட்டம் இன்று (27) பிரதமர் அலுவலகத்தில் இடம் பெற்றது. இந்த கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்ட விடயங்களாவன,
  1. சர்வதேச மட்டத்தில் நிதி கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளில் வணிக வங்கிகள் தொடர்ந்து சேவையில் ஈடுப்பட வேண்டும். 
  2. கசோலை ஊடான கொடுக்கல் வாங்கலும் துரிதப்படுத்தப்பட வேண்டும்.
  3. எ.டி.ம் இயந்திரம் ஊடான சேவைகள் தொலைபேசி ஊடாக அனைவரும் பெற்றுக்கொள்ள வேண்டும். 
  4. குறைந்தபட்ச ஊழியர்களை கொண்டாவது ஊரடங்கு சட்டம் தொடர்ந்து செயல்பட வேண்டும்.
  5. ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருக்கும் வேளையில் பிரதேச செயலக பிரிவுகளில் குறைந்தபட்சம் ஒரு வங்கியாவது வழமையான நேரத்திற்கு அதிகமான நேரம் ஈடுப்பட வேண்டும்.

Post a Comment

0 Comments