சாவகச்சேரி நகர சபை உறுப்பினர் உட்பட நால்வர் பொலிஸாரால் அதிரடியாக கைது!

யாழ்ப்பாணம் - கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வரணிப் பகுதியில் ஊரடங்கு நேரத்தில் நடமாடிய குற்றச்சாட்டில் சாவகச்சேரி நகர சபை உறுப்பினர் ஒருவர் உட்பட நான்கு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (19) அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் அவர்களிடம் இருந்து வாகனமும் கையகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வசதி குறைந்த குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்க முற்பட்ட சமயமே இவர்கள் கொடிகாமம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். சாவகச்சேரி நகர சபை உறுப்பினர் ஒருவரும், அவர் சார்ந்த கட்சியின் ஆதரவாளர்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களாவர்.

கைதுசெய்யப்பட்ட வேளையில், சாவகச்சேரிப் பகுதியில் உணவுப் பொருட்களை விநியோகிப்பதற்காக சாவகச்சேரி பொலிஸாரினால் வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரம் அவர்களிடம் இருந்துள்ளது.

எனினும், கொடிகாமம் பொலிஸ் பிரிவினுள் ஊரடங்கு வேளையில் நடமாடுவதற்கான அனுமதிப்பத்திரம் எதனையும் அவர்கள் வைத்திருக்கவில்லை என்று கூறப்படுகிறது.

No comments: