கொரோனாவால் தொடரும் அச்சம் - பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து இலங்கைக்கு வருவதற்கு தடை

(CBC TAMIL - COLOMBO) - நாளை (14) முதல் 2 வாரங்களுக்கு அமுலில் இருக்கும் வகையில் ஈரான், இத்தாலி, தென் கொரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகள் இலங்கை வருவதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று இலங்கையிலும் பரவி வருகிறது. கொரோனாவினால் பாதிக்கப்பட்ட இரண்டு இலங்கையர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

அத்தோடு மேலும் இருவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனும் சந்தேகத்தின் பேரில் அங்கொடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தலில் இருந்து பாதுகாப்பு பெறுவதற்காக நாட்டில் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

No comments: