பிலிப்பைன்ஸில் கொரோனாவினால் மேலும் எண்மர் உயிரிழப்பு

(CBC TAMIL - MANILA) - பிலிப்பைன்ஸில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக மேலும் 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும் வைரஸ் தொற்றுக்கு இலக்காகிய 16 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்தவகையில் தற்போதுவரை 33 பேர் உயிரிழந்துள்ளதாகவும் வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 396 ஆக அதிகரித்துள்ளது என்றும் அந்நாட்டு சுகாதார அமைச்சின் பிரதி செயலாளர் மரியா ரொசாரியோ வெர்ஜெய்ர் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments