4 ஆவது நாளாக கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி - சீனா அரசு

சீனாவில் தொடர்ந்தும், நான்காவது நாளாக கொரோனா வைரஸ் தோற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

வெளிநாட்டு பயணிகளுக்கான எல்லைகள் மூடுவதன் மூலமும் சர்வதேச விமான சேவைகளின் குறைத்தமையின் மூலமாக இந்த தொற்று குறைந்துள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதன் பிரகாரம் நேற்று (29) உள்நாட்டவர் உட்பட ஒருவர் உட்பட 31 பேர் அடையாளம் காணப்பட்டதாகவும் இது அதற்கு முந்திய நாளில் 45 ஆக இருந்தது என்றும் அந்நாட்டு சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மேலும் நான்கு புதிய இறப்புகள் பதிவாகியுள்ளன, இது சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டதில் இருந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை 3,304 ஆகவும் வைரஸ் தோற்றாளர்களின் எண்ணிக்கையை 81,470 ஆகவும் அதிகரித்துள்ளது.

கடந்த பெப்ரவரி மாதத்தில் இருந்த பாதிப்பை விட இது மிக குறைவு என்றும் அந்நாட்டு சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

No comments: