ரஷ்யாவின் குரில் தீவுகளில் பாரிய நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை தொடர்பாக ஆராய்வு

ரஷ்யாவின் குரில் தீவுகளில் 7.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

ரஷ்யாவின் குரில் தீவுகளில் செவெரோவிலிருந்து தென்கிழக்கு 218 கிலோமீட்டர் தொலைவில் 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக நேற்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்துள்ளது.

ஐயூர்ப்பினும் சுமை எச்சரிக்கை தொடர்பாக எவ்வித அறிவிப்பும் வெளியாகாத நிலையில் அமெரிக்க தேசிய சுனாமி எச்சரிக்கை நிலையம் இந்த நிகழ்வை மதிப்பாய்வு செய்வதாக கூறியுள்ளது.

குரில் தீவுகள் ஹவாயிலிருந்து 3,700 மைல் தொலைவில் உள்ளது. எனவே ஹவாய்க்கு சுனாமி அச்சுறுத்தல் இருப்பதா இல்லையா என்பது தொடர்பாக ஆராய்ந்துவருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Post a Comment

0 Comments