கோவிட் -19 ஐ கட்டுப்படுத்த அடுத்த வாரம் பொது கூட்டங்களை தடை செய்ய அரசாங்கம் நடவடிக்கை

(CBC TAMIL - UK TAMIL) - கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் முயற்சியாக பொது கூட்டங்களைத் தடைசெய்யும் முகமாக பிரித்தானிய அரசாங்கம் அடுத்த வாரம் அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் வைரஸ் பரவுவதை குறைக்க மற்ற ஐரோப்பிய நாடுகள் கடைப்பிடித்த சில கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அழுத்தத்தை பிரதமர் பொரிஸ் ஜோன்சன் எதிர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: