வேலையற்ற பட்டதாரிகளுக்கான அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு

தற்போது ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளதால், வேலையற்ற பட்டதாரி பயிலுனர்கள் சுகாதார அலுவலகங்களின் மருத்துவ அலுவலரிடம் அறிக்கை அளிக்க வேண்டிய அவசியமில்லை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்த செயன்முறை தொடர்பான விவரங்கள் எதிர்காலத்தில் அறிவிக்கப்படும் என்று பொது நிர்வாக அமைச்சு இன்று (30) தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவது தொடர்பான கடமைகளுக்காக வேலையற்ற பட்டதாரி பயிலுனர்களை சுகாதார வைத்திய அதிகாரிகள் அலுவலகங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரதேச செயலகங்களில் பணியாற்றுவதாக அறிவித்த பட்டதாரிகளின் பயிற்சியை மே மாதம் வரை ஒத்திவைக்கும் முடிவை அரசாங்கம் முன்னதாகவே எட்டியது.

எவ்வாறாயினும், சுகாதார அமைச்சின் வேண்டுகோளின் அடிப்படையில் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்கு உதவுவதற்காக, வேலையற்ற பட்டதாரி பயிற்சியாளர்களை சுகாதார வைத்திய அதிகாரிகள் அலுவலகங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது.

No comments: