கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1,093 பேர் அதிரடியாக கைது...!

ஊரடங்குச் சட்டத்தை மீறி செயற்பட்டமை தொடர்பாக கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1,093 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 310 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் கடந்த 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணிமுதல் பொலிஸ் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டதுடன், மக்கள் தமது அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக சிறு காலவகாசம் வழங்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு கடந்துள்ள 12 நாட்களுக்குள் மாத்திரம் 8,451  பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள், கார், முச்சக்கர வண்டி உள்ளிட்ட 2078 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஊரடங்கு அனுமதிப்பத்திரமின்றி வீதிகளில் நடமாடுவோருக்கு எதிராக தனிமைப்படுத்தல் விதிமுறைகள் மற்றும் குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு குற்றம் நிரூபிக்கப்பட்டால் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என பொலிஸார் கூறியுள்ளனர்.

இதேவேளை, சந்தேகநபர்களிடமிருந்து கைப்பற்றப்படும் வாகனங்கள் தொற்றுநிலைமை வழமைக்கு திரும்பும் வரை தடுத்துவைக்கப்பட்டிருக்கும் என பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.

No comments: