இலங்கையில் இன்று மட்டும் 15 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம்!

மேலும் 14 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் உறுதியான நிலையில் நாட்டில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 233 ஆக உயர்ந்துள்ளது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்தவகையில் பலாலியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 8 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் முழங்காவில் கடற்படை முகாமில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அந்தவகையில் இன்று மட்டும் 15 பேர் நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 61 பேர் இதுவரை குணமடைந்து வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: