யாழில் பரிசோதிக்கப்பட்ட 17 பேரின் முடிவு வெளியானது

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று (13) பரிசோதிக்கப்பட்ட 17 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 5 பேருகக்கும் சாவகச்சேரி சுகாதார பிரிவைச் சேர்ந்த 12 பேருக்கும் இவ்வாறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன என போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இதேவேளை இன்றும் கொரோனா வைரஸ் தோரண பரிசோதனைகள் இடம்பெறும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

No comments: