கொரோனா வைரஸில் இருந்து 34 பேர் குணமடைந்தனர்

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் குணமடைந்துள்ள நிலையில் இதுவரை 34 பேர் வைத்தியசாலையில் இருந்து குணமடைந்து வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக அடையாளம் காணப்பட்ட 176 பேரில் தற்போது 137 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன் மருத்துவமனைகளில் தற்போது 259 பேர் கொரோனா தொற்று தொடர்பில் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் 05 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது.

No comments: