மேலும் 10 பேருக்கு கொரோனாவைரஸ் தொற்று இன்று மட்டும் 44 பேர் - விபரம் உள்ளே

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 567 ஆக அதிகரித்துள்ளது.

ஏற்கனவே 34 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்ட நிலையில் தற்போது மேலும் 10 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இதுவரை மட்டும் 44 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு இன்று (27) அடையாளம் காணப்பட்ட 44 பேரும் கடற்படையினர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இன்று 6 பேர் குணமடைந்துள்ள நிலையில் மொத்தமாக 126 பேர் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளதுடன் 7 பேரின் மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: