கொரோனாவினால் இலங்கையில் ஐந்தாவது மரணம்...!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான ஐந்தாவது நோயாளியும் சற்றுமுன்னர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இத்தாலியில் இருந்து திரும்பி, வெலிகந்த மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்த  44 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இத்தாலியிலிருந்து வந்த குறித்த நபர், தனிமைப்படுத்தல்  நிலையத்திலிருந்து அடையாளப் படுத்தப்பட்டுள்ளதோடு, கடந்த மார்ச் 23ஆம் திகதி வெலிகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பின்னர் அவரது நிலைமை மோசமடைந்ததை அடுத்து அவர் மார்ச் 26ஆம் திகதி வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்றையதினம் (04) அவர் மரணமடைந்துள்ளதாக அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

அவருக்கு வேறு எவ்வித நோய்களும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் முதலாவது கொரோனா தொற்றின் காரணமான மரணம் கடந்த 28ஆம் திகதி பதிவானது. 60 வயதான மாரவிலவைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு மரணமடைந்திருந்தார்.

இரண்டாவது மரணம் கடந்த மார்ச் 30ஆம் திகதி நீர்கொழும்பு, போருதொட்டையைச் சேர்ந்த 64 வயதான ஒருவர் மரணமடைந்திருந்தார். மூன்றாவது மரணம் ஏப்ரல் 01ஆம் திகதி பதிவானது. 73 வயதான மருதானையைச் சேர்ந்த ஒருவர் மரணித்திருந்தார்.

நான்காவது மரணம் ஏப்ரல் 02ஆம் திகதி, 58 வயதான ஆண் ஒருவரே இவ்வாறு மரணமடைந்திருந்தார்.
இதேவேளை, 55 மற்றும் 70 வயதுடைய இரு இலங்கையர் லண்டனில் மரணமடைந்திருந்தனர்.

இதேவேளை மார்ச் 25ஆம் திகதி யாழ். புங்குடுதீவைச் சேர்ந்த 59 வயதான நபர் சுவிட்சர்லாந்தில் உயிரிழந்திருந்தார். அதற்கமைய உலகளாவிய ரீதியில் 3 பேரும், இலங்கையில் 5 பேரும் என இலங்கையர் 08 பேர் கொரோனா தொற்றினால் இது வரை மரணமடைந்துள்ளமை அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

No comments: