கொழும்பில் சிகை அலங்காரிக்கு கொரோனா - மேலும் 25 பேருக்கு பரவியிருக்கலாம் என அச்சம்

கொழும்பு கெசல்வத்தை - பண்டாரநாயக்க மாவத்தையில் சிகை அலங்காரி ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

குறித்த நபர் 25 பேருக்கு சிகை அலங்காரம் செய்திருந்த நிலையில் குறித்த 25 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று பரவியிருக்கலாம் என மேலும் சந்தேகம் வெளியிப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் உறுதியான 310 பேர் இதுவரை நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 104 பேர் இதுவரை குணமடைந்து வெளியேறியுள்ளனர்.

மேலும் கொரோனா வைரஸ் தாக்கம் உறுதியானவர்களில் 07 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: