ஜூன் மாதம் 20 ஆம் திகதி தேர்தல்!

நாடாளுமன்றத் தேர்தலை தேர்தலை எதிர்வரும் ஜூன் மாதம் 20 ஆம் திகதி நடத்துவதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்திருந்த நிலையில் ஜூன் 20 ஆம் திகதி நடத்தும் திகதியிடப்பட்ட தேர்தல் ஆணைக்குழுவின் வர்த்தமானி வெளியாகியுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான சூழ்நிலை குறித்து சுகாதார பணிப்பாளர், பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் தேர்தல்கள் ஆணைக்குழு நடத்திய பேச்சுவர்த்தையில் தீர்மானங்கள் எதனையும் அறிவிக்காதவிடத்தும், ஜூன் மாதம் 20 ஆம் திகதி தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு இன்று தீர்மானம் எடுத்திருந்தது.

இந்நிலையில் அரசியல் கட்சிகளின் செயலாளர்களை தேர்தல்கள் ஆணையாளர் இன்று (21) சந்திக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments: