அரசு உயர் நீதிமன்றின் கருத்தை கேட்க வேண்டும்: ஐ.தே.க.

தேர்தலை ஒத்திவைப்பதன் மூலம் எழுந்துள்ள அரசியலமைப்பு நெருக்கடி குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி உயர்நீதிமன்றத்தின் ஆலோசனையைப் பெற வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான ரவி கருணாநாயக்க, உயர் நீதிமன்றின் கருத்தை கோருவதே அரசாங்கத்திற்கான சிறந்த நடவடிக்கை எனக் கூறினார்.

"தற்போதைய கொரோனா வைரஸ் நிலைமை தொடர்ந்தால், ஜூன் 20 அன்று தேர்தலை நடத்த முடியாது. நாங்கள் நிலைமையை தேவையற்ற முறையில் பயன்படுத்த முயற்சிக்கிறோம் என கூறி அவர்கள் நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதில் எந்த அர்த்தமும் இல்லை என கூறுகின்றார்கள். 

எனவே எவ்வாறு நடவடிக்கை எடுக்கலாம் என்பதைப் பார்க்க அரசாங்கம் நீதிமன்றங்களுக்குச் செல்வதே சிறந்த வழி" என கூறினார்.

"கோவிட் -19 தாக்கம் மற்றும் அதைக் கட்டுப்படுத்துவதுதே தற்போது மிக முக்கியமான விடயம். எனவே இந்த தொற்றுநோய் கட்டுப்பாட்டுக்குள் வந்தபின் தேர்தலை நடத்துவது சிறந்தது" என தெரிவித்தார்.

No comments: