யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா - 03 நோயாளிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டனர்

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் மேலும் 03 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மொத்த எண்ணிக்கை 146 ஆக அதிகரித்துள்ளது.

யாழ்ப்பாணம், குருநாகல், மருதானை பகுதிகளை சேந்தவர்களே புதிதாக நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை கொரோனா வைரஸ் ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் நாடுமுழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் 231 ற்கும் மேற்பட்டவர்கள் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள மத போதகர் ஒருவருக்கே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

No comments: