ஜனாதிபதிக்கு மூன்று மாதங்களுக்கு நிதி அதிகாரம் இருக்கும் - யு.ஆர். டி சில்வா

தேர்தல்கள் ஆணைக்குழு மே 2 ஆம் திகதி மீண்டும் கூடி தேர்தல் தொடர்பான திகதியை மறுபரிசீலனை செய்யவுள்ளதாக தெரிவித்துள்ள நிலையில் அவர்கள் முடிவை அறிவிக்கும்வரை எவரும் நீதிமன்றத்தை நாடமுடியாது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணி யு.ஆர். டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஆனால் அவர்கள் ஜூன் 20 ஆம் திகதி தேர்தலை நடத்துவதாக அறிவித்தால் நாட்டின் பிரஜை என்ற ரீதியில், அரசியல் கட்சி என்ற அடிப்படையில் அல்லது தேர்தல்கள் கண்காணிப்பு அமைப்பு சார்பாக எவரேனும் உய்ரநீதிமன்றத்தை நாடி வழக்கு தாக்கல் செய்ய முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு எதிர்வரும் 30 ஆம் திகதியுடன் ஜனாதிபதிக்கு இருக்கும் நிதி அதிகாரம் இல்லாமல் போவது குறித்து பலர் கருத்து தெரிவிக்கின்றனர். ஆனால் நாடாளுமன்றம் கூட்டப்படுவதாக கூறப்படும் திகதியில் இருந்து மூன்று மாதங்கக்கு ஜனாதிபதியினால் நிதி விடயங்கைள கையாள முடியும் என அரசியலமைப்பில் தெளிவாக கூறப்பட்டுள்ளதையும் யு.ஆர். டி சில்வா சுட்டிக்காட்டினார்.

புதிய நாடாளுமன்றம் கூட்டப்படுவதாக நிர்ணயிக்கப்பட்ட திகதியில் இருந்து மூன்று மாதங்கள் கொண்ட காலப்பகுதி முடிவடையும்வரை பகிரங்க சேவைக்கு அத்தியாவசியம் என ஜனாதிபதி கருதக்கூடிய அத்தகைய பணத்தை திரட்டு நிதியில் இருந்து வழங்கவும் செலவிடுவதற்கும் ஜனாதிபதிக்கு அதிகாரம் இருக்கு என அரசியமைப்பு தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.

அத்தோடு ஜனாதிபதி தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடி நிதி விடயங்களை கையாள முடியும் என்றும் அரசியலமைப்பின் 150 (4) ஆம் உபபிரிவு தெரிவிப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை பகுதி பகுதியாக தேர்தலை நடத்துவதற்கோ அல்லது மாற்றுவளையை பயன்படுத்த முடியுமா என்பது தொடர்பாக அனைத்து தரப்பினரும் இணக்கம் தெரிவிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி யு.ஆர். டி சில்வா தெரிவித்துள்ளார்.

No comments: