வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு நிவாரணம்...!

மேல் மாகாணத்தில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு, கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டச் செயலாளர்களின் பூரண கண்காணிப்பின் கீழ், நிவாரணப் பொதிகளை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அந்தந்த கிராம சேவையாளர் பிரிவுகளில் சிக்கியுள்ளோர் தொடர்பில் கிராம உத்தியோகத்தர், பொலிஸாரின் உதவியுடன் குறித்த நிவாரணத்தை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்குத் தேவையான நிதியை, மாவட்ட செயலாளர்களுக்கு வழங்குமாறு, திரைசேறிக்கு அறிவித்துள்ளதாக, பொருளாதார மறுசீரமைப்பு, வறுமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணி தெரிவித்துள்ளது.

இதுவரை கிடைக்கப்பெற்றுள்ள தரவுகளுக்கு இணங்க, வெளிமாவட்டங்களில் இருந்து தொழில் நிமித்தம் வருகைதந்த 52 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் மேல் மாகாணத்தில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ளனரெனவும் மேற்படி செயலணி சுட்டிக்காட்டியுள்ளது.

No comments: