கொரோனா கட்டுப்படுத்த மூன்று மாதங்கள் ஊரடங்கு தொடர வேண்டும்...!

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த குறைந்தபட்சம் மூன்று மாதங்களாவது ஊரடங்கு உத்தரவு தொடர வேண்டும் என்று மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் வைத்தியர் ஜெயருவன் பண்டாரா தெரிவித்துள்ளார்.

அதை நடைமுறைப்படுத்த முடியாவிட்டால், மக்கள் ஊரடங்கு உத்தரவை மீறாமல் குறைந்தது ஒரு மாதமாவது சமூக இடைவெளியை பேண வேண்டுமென தெரிவித்துள்ளார்.

இல்லையென்றால், நிலைமை ஆபத்தானது என தெரிவித்த அவர், இன்னும் இரண்டு வாரங்களுக்குள், கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகலாமென்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள எம்மோடு இணைந்திருங்கள்

No comments: