அத்தியாவசிய உணவுப் பொருட்களை பதுக்கி வைத்தால் கடும் நடவடிக்கை - அமைச்சர் எச்சரிக்கை

அத்தியாவசிய உணவுப் பொருட்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக ஊரடங்கு விதிகளின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க எச்சரித்துள்ளார்.

நேற்று (06) அமைச்சின் செயலகத்தில் அரச அதிகாரிகளுடன் இடம்பெற்ற உயர்மட்ட கலந்துரையாடலின்போதே அமைச்சர் இந்த எச்சரிக்கையினை விடுத்தார்.

மேலும் வர்த்தகர்கள் பொருட்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்கள் தொடர்பாக தங்களுக்கு பல முறைபட்டுகள் கிடைத்துள்ளதாகவும் இது குறித்து நுகர்வோர் அதிகார சபையின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதேவேளை சிரேஷ்ட பிரஜைகள் மற்றும் சிறுநீரக நோயாளிகளுக்கு வழங்கப்படும் நிதி விரைவில் வழங்கப்படும் என்றும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கூறினார்.

அத்தோடு பேருந்து சாரதிகள்,, நடத்துனர் மற்றும் ஊடகவியலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய அவர் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க 300 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

No comments: