யாழில் கொரோனா தொற்று பரிசோதனை மக்களுக்கு ஆறுதல் - சித்தார்த்தன்

கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான பரிசோதனை நடவடிக்கைகள் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்படுவது மக்களுக்கு ஆறுதலளிப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

உலகை உலுக்கிவரும் கொரோனா வைரஸ் தாக்கத்தை ஏற்படுத்திவரும் நிலையில் யாழ்ப்பாணத்திற்கு வெளியில் பல நாட்களாக பரிசோதனைகள் நடத்தப்பட்டுவந்ததை சுட்டிக்காட்டிய அவர், எனவே தற்போது அந்த உன்னத சேவையில் ஈடுபடுபவர்களுக்கு தனது பாராட்டுக்களை தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்படுகின்றமை யாழ் மக்களுக்கு ஆறுதலளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த பரிசோதனைகளை மேற்கொள்ளும் வைத்தியர்கள், வைத்திய துறை சார்ந்தவர்கள் மற்றும் சிற்ரஊழியர்கள் அனைவருக்கும் பாராட்டுக்களை தெரிவித்த அவர் இவர்களின் இந்த உன்னத சேவை மக்களுக்கு நிம்மதியையும் ஆறுதலையும் அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

No comments: