சீனாவில் நேற்று மட்டும் 16 பேருக்கு கொரோனா வைரஸ் - இதில் 09 பேர் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள்

கொரோனா வைரஸினால் சீனாவில் நேற்று (18) மேலும் 16 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்தவகையில் மார்ச் 17 ஆம் திகதி முதல் மிகக் குறைந்த எண்ணிக்கை இது என்றும் ஒரு நாள் முன்னதாக 27 ஆக இருந்தது என்றும் இன்று (19) சுகாதார அமைச்சு வெளியிடப்பட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாக அடையாளம் காணப்பட்ட நோயாளிகளில் 9 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என்றும் மீதமுள்ள 7 உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகள் உள்நாட்டில் பரவியதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை எந்தவித உயிரிழப்புக்களை பதிவாகவில்லை. ஏப்ரல் 18 ஆம் திகதி நிலவரப்படி நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 82,735 ஐ எட்டியுள்ளது, அதே நேரத்தில் வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 4,632 ஆக உள்ளது.

No comments: