ஒரு மாதம் முடக்கப்படுகின்றது சிங்கப்பூர்

கொரோனா வைரஸ் தாக்கம் மேலும் பரவாமல் இருக்க எதிர்வரும் 7 ஆம் திகதி முதல் ஒரு மாதத்திற்கு சிங்கப்பூர் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த சமூக இடைவெளி மிக அவசியம் என்பதனால் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்களை வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

எனவே எதிர்வரும் 7 ஆம் திகதிமுதல் ஒரு மாதத்திற்கு நாடளாவிய ரீதியில் சிங்கப்பூரில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படும் என பிரதமர் லீ ஹுசைன் லூங் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக 1114 நோயாளிகள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 5 நோயாளிகள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: