கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் மாவட்ட ரீதியான விபரம் இதோ...!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளிகளின் எண்ணிக்கை 238 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அதன்படி கடந்த 24 மணிநேரத்தில் 05 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டதாகவும்  02 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் நோய் தொற்று உறுதியான 238 பேரில் 63 பேர் முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்றும் 7 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் (முதல் 5 மாவட்டங்கள்) மாவட்ட ரீதியாக, கொழும்பில் 47 பேரும், களுத்துறையில் 45 பேரும், புத்தளத்தில் 35 பேரும் கம்பஹா 26 மற்றும் யாழ்ப்பாணத்தில் 13 பேரும் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் இன்றைய செய்திகளை படிக்க

No comments: