கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடி நிலையிலிருந்து மீள்வதற்கு நாட்டுமக்கள், சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் அரசியல், மதத்தலைவர்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்று சபாநாயகர் கரு ஜயசூரிய அழைப்பு விடுத்துள்ளார்.
இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலின் உச்சத்தைத் தீர்மானிக்கும் வாரங்களாக எதிர்வரும் இரு வாரங்களும் அமையும் என மருத்துவ நிபுணர்கள் எதிர்வு கூறியிருக்கும் நிலையிலேயே முன்னாள் சபாநாயகர் இவ்வாறு பதிவிட்டிருக்கிறார்.
அவர் மேலும் டுவிட்டரில் தெரிவிக்கையில், "ஒரே நாட்டவர் என்ற வகையில் தற்போது நாம் கொரோனா வைரஸ் பரவலினால் ஏற்பட்டுள்ள புதிய சவாலொன்றுக்கு முகங்கொடுத்திருக்கிறோம்.
இந்த நெருக்கடி நிலையிலிருந்து மீள்வதற்கு நாட்டுமக்கள், சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் அரசியல், மதத்தலைவர்கள் அனைவரும் ஓரணியில் ஒன்றுபட வேண்டும். அதுமாத்திரமன்றி இவ்விடயத்தில் நாடாளுமன்றமும் ஒரு முக்கிய பாத்திரத்தை வகிக்க வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.
As the nation is now facing a new level of the threat of #COVID19, every citizen, civil, political, and religious leader must come together to strengthen the national drive to overcome the crisis. The Parliament will also have a major role to play.— Karu Jayasuriya (@KaruOnline) April 1, 2020
0 Comments