ரஞ்சன் ராமநாயக்க பிணையில் விடுதலை

பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க பிணையில் விடுதலை செய்யப்பட்டள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீட்டு வளாகத்திற்குள் மருத்துவ உதவியாளர் நுழையும் போது பொலிஸார் தடுத்து நிறுத்தியதை அடுத்து வாக்குவாதம் இடம்பெற்றது. இதனை அடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.

விளையாட்டு அமைச்சின் மருத்துவ உதவியாளரான குறித்த நபர் கடந்த செவ்வாய்க்கிழமை நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் நுகேகொடை நீதவான் நீதிமன்றம் அவரை பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளது.

No comments: