அனைத்து பொருட்களின் இறக்குமதியை நிறுத்துவதற்கும் அரசாங்கம் தீர்மானம்

மருந்து வகைகள் மற்றும் எரிபொருட்கள் தவிர அனைத்து பொருட்களின் இறக்குமதியை நிறுத்துவதற்கும் அல்லது கட்டுப்படுத்துவதற்கும் அமைச்சரவை முடிவுசெய்துள்ளது.

இன்று (02) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சரவை இணைப்பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பதிரண கூறினார்.

உள்ளூர் விவசாயத் துறையை வலுப்படுத்துவதோடு, எதிர்காலத்தில் நன்கு நிறுவப்பட்ட தொழில்களைத் தொடங்குவதையும் நோக்கமாகக் கொண்டு இந்த முடிவு அரசாங்கத்தினால் எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

No comments: