10 தொன் உயிர்காக்கும் அத்தியாவசிய மருந்து பொருட்களை அன்பளிப்பு செய்தது இந்தியா

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையினை கருத்திற்கொண்டு 10 தொன் உயிர்காக்கும் அத்தியாவசிய மருந்து பொருட்களை இந்திய அரசாங்கம் அன்பளிப்பாக வழங்கியுள்ளது.

கடந்த மாதம் 26 ஆம் திகதி இடம்பெற்ற சார்க் மாநாட்டில் பேசிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இலங்கைக்கு உதவி வழங்குமாறு கோரிக்கையொன்றினை முன்வைத்திருந்தார்.

இந்நிலையில் இந்திய அரசாங்கத்தினால் குறித்த மருந்துப்பொருட்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளதுடன் இந்த மருந்துப்பொருட்கள் எயார் இந்தியா விமான சேவையூடாக நேற்று (07) இலங்கையை வந்தடைந்தது.

இலங்கைக்கான ஆதரவில் இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டினை எடுத்துக்காட்டும் மற்றுமொரு சந்தர்ப்பம் என்றும் உள்நாட்டில் காணப்படும் சவால்கள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் தமது நண்பர்களுடன் வளங்களையும் நிபுணத்துவத்தையும் பகிர்ந்துகொள்ளவதிலும் இந்தியா மிகவும் உறுதியாக உள்ளது என்றும் இந்தியா தெரிவித்துள்ளது.


No comments: