தன்னை தானே எரியூட்டி உயிரை மாய்த்த முதியவர்...! யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம் ஏழாலை தெற்கு மயிலங்காடு பகுதியில் எரிந்த நிலையில் சடலம் ஒன்று இன்று (26) அதிகாலை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

மயிலங்காடு பகுதியில் மயிலங்காடு முருகமூர்த்தி ஆலயத்துக்கு அண்மையாக எரிந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

மயிலங்காடு பகுதியைச் சேர்ந்த 82 வயதுடைய நடேசமூர்த்தி என்பவரே இவ்வாறு எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மேலும் அவர் தனக்குத் தானே எரியூட்டி உயிரிழந்துள்ளார் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

No comments: