சீனாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா நோயாளிகள்....!

சீனாவில் நேற்று (சனிக்கிழமை) மட்டும் 99 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இது முந்தைய நாளினை விட இரட்டிப்பான அதிகரிப்பு என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏப்ரல் 11 அன்று புதிதாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் நோயாளிகள் 63 ஆக உயர்ந்துள்ளன என்றும் இது முந்தைய நாள் 34 ஆக இருந்தது என்று சீனாவின் தேசிய சுகாதார ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

மார்ச் 6 ஆம் திகதிக்கு பின்னர் இது மிகப்பெரிய தினசரி எண்ணிக்கை என்றும் ஏறக்குறைய அனைத்து புதிய தொற்றுநோயாளிகளும் வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளை உள்ளடக்கியது. குறிப்பாக 99 வழக்குகளில் இரண்டு மட்டுமே உள்நாட்டில் பரவின என குறித்த ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

சீனாவின் வணிக மையமான ஷாங்காயும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கே கொரோனா வைரஸ் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளது. அந்தவகையில் நேற்று (11) நகரத்தில் 52 புதிய கொரோனா வைரஸ் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டனர் என்றும் இவை அனைத்தும் வெளிநாட்டிலிருந்து பயணம் செய்த சீன பிரஜைகள் சம்பந்தப்பட்டவை என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

ஷாங்காயின் புதிய நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டவர்களில் 51 பேர் ரஷ்யாவில் இருந்து வருகைதந்தவர்கள் என்றும் மற்றுமொருவர் கனடாவில் இருந்து வந்தவர் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் நாட்டின் தொற்றுநோய்களின் எண்ணிக்கை இப்போது 82,052 ஆகவும், இறப்பு எண்ணிக்கை 3,339 ஆகவும் உள்ளது.

No comments: