அமெரிக்காவில் 23000 ஐ தாண்டிய இறப்புக்கள்.... வைரஸ் தாக்கம் மேலும் உச்சத்தை எட்டக்கூடும்.. அதிகாரிகள் எச்சரிக்கை

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்து 644 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் மிக மோசமான மற்றும் இந்த வாரம் கொரோனா வைரஸ் தாக்கம் மேலும் உச்சத்தை எட்டக்கூடும் என அதிகாரிகளை மேற்கோளிட்டு சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

உலகின் மூன்றாவது பெரிய மக்கள்தொகை கொண்ட அமெரிக்கா, வேறு எந்த நாட்டையும் விட கொரோனா வைரஸ் தாக்கத்தினால் அதிகமான இறப்புகளைப் பதிவு செய்துள்ளது. இன்றைய நிலவரப்படி மொத்தம் 587,155 பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் 1.8 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதிக மக்கள் தொகை கொண்ட குறிப்பாக 8.4 மில்லியன் மக்கள் தொகையை கொண்ட நியூயோர்க்கில் 10 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதுடன் 195,655 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவின் பல பகுதிகளில் பல வாரங்களாக கொரோனா வைரஸ் தாக்கம் பரவுவதைத் தடுப்பதற்காக வீட்டிலேயே தங்குவதற்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளமையினால் பொருளாதாரத்திலும் பாரிய சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் முதலாம் திகதி ட்ரம்ப் அரசாங்கம் கட்டுப்பாடுகளை தளர்த்தும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: