அரசாங்கத்திற்கான ஆதரவை மீண்டும் உறுதியளித்த ஐ.தே.க.

ஐக்கிய தேசியக் கட்சியினர் சுகாதார சேவைகள் பணிப்பாளரை சந்தித்து கோவிட் -19 நோய்த்தொற்று பரவுவதைத் தடுப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு தங்களது ஆதரவை உறுதியளித்துள்ளனர்.

அந்தவகையில் முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் சேர்ந்த பல முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் நேற்று (28) சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் அனில் ஜாசிங்கவை சந்தித்ததாக அக்கட்சியின் உப தலைவர் ரவி கருணநாயக்க தெரிவித்தார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தயா கமகே மற்றும் அர்ஜுன ரணதுங்க மற்றும் அக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் ஸ்கைப் மூலம் கலந்துரையாடியதாகவும் குறிப்பிட்டார்.

இதன்போது கொரோனா வைரஸ் தொடர்பான நிலைமை குறித்தும் மேலும் தொற்று நோயை எதிர்த்துப் போராடுவதற்கு எங்கள் கட்சியின் ஆதரவை உறுதிப்படுத்தியதாகவும் ரவி கருணநாயக்க குறிப்பிட்டார்.

மேலும் கொழும்பின் பல பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவல்கள் குறித்தும் கலந்துரையாடியதாக அவர் கூறினார்.

No comments: