மேலும் 11 பேருக்கு கொரோனா வைரஸ்: மொத்த எண்ணிக்கை 835 ஆக அதிகரிப்பு

இலங்கையில் மேலும் 11 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாகவும் மொத்த எண்ணிக்கை 835 ஆக அதிகரித்துள்ளது என்றும் சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 11 பேரும் கடற்படையினர் என்றும் சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 586 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருவதுடன் 240 பேர் பூரணகுணம் அடைந்துள்ளதுடன் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

Post a Comment

0 Comments