கொரோனாவில் இருந்து மேலும் 15 பேர் குணமடைந்தனர்

கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி தற்போது குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 584 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 15 பேர் குணமடைந்த நிலையிலேயே இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வாறு குணமடைந்தவர்களில் 221 நோயாளிகள் கடற்படையினர் என்றும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அத்தோடு இலங்கையில் இன்று காலை நிலவரப்படி கொரோனா தொற்று கண்டறியப்பட்ட 1027 பேரில் 434 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments: