கொரோனா நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டவர்களில் குணமடைந்தோரின் எண்ணிக்கையும் அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியவர்கள் மொத்த எண்ணிக்கை 538 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்று (17) மேலும் 18 பேர் குணமடைந்த நிலையிலேயே இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் நோயாளிகளாக அடையாளம் காணப்பட்ட 960 பேரில் 413 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருவதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

No comments: