மேலும் 20 பேர் குணமடைந்தனர்... 758 பேர் கடற்படையினர், 515 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள்...

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களில் மேலும் 20 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி இதுவரை குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியவர்கள் மொத்த எண்ணிக்கை 801 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட 1620 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அதில் 809 பேர் தொடர்ந்தும் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 758 பேர் கடற்படையினர் என்றும் 515 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என்றும் சமீபத்தைய அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

No comments: