கடந்த 24 மணித்தியாலங்களில் 660 பேர் உட்பட 60 ஆயிரம் பேர் கைது!

ஊரடங்கு விதிமுறைகளை மீறிய 660 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் இதன்போது 256 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரையான கடந்த 24 மணித்தியாலங்களில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளது.

இதன்படி கடந்த கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் இன்று காலை 6 மணி வரையான காலப்பகுதியில் ஊரடங்கு விதிமுறைகளை மீறிய 60 ஆயிரத்து 425 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்தோடு அவர்களின் 16 ஆயிரத்து ,924 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் கைது செய்யப்பட்டவர்களில் 17 ஆயிரத்து 193 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments: