நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1027 ஆகி உயர்வு

கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகிய மேலும் 35 பேர் நேற்று (19) அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்கள் அனைவரும் கடற்படையைச் சேர்ந்தவர்கள் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்திருந்தார்.

நாட்டில் இதுவரையில் 1027 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு கொரோனா வைரஸ்தொற்றுக்குள்ளான மேலும் 10 பேர் நேற்றைய தினம் குணமடைந்து, வைத்தியசாலைகளில் இருந்து வௌியேறியுள்ளனர்.

அதற்கமைய, நாட்டில் கொரோனா வைரஸ் நோயாளர்கள் 569 பேர் இதுவரையில் குணமடைந்துள்ள அதேவேளை 09 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

No comments: