எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்குமா - அரசாங்கம் விளக்கம்

இந்திய எண்ணெய் நிறுவனம் ஒரு லீட்டர் பெட்ரோல் (92-ஒக்டேன்) விலையை லிட்டருக்கு 5 ஆக உயர்த்தியிருந்தாலும், இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் விலையை அதிகரிக்கவில்லை என்று மின் மற்றும் எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

மேலும் எரிபொருள் விலையை அதிகரிக்க ஐ.ஓ.சி எடுத்த முடிவு அந்த நிறுவனத்தின் முடிவு என்றும், இதில் அரசாங்கத்தின் தலையீடு எதுவும் இல்லை என்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர கூறினார்.

அத்தோடு உலக சந்தை விலைகள் குறைந்துவிட்ட போதிலும் எரிபொருள் விலையை அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்ற செய்திகள் முற்றிலும் தவறானவை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

No comments: