கொரோனா வைரஸ் தாக்கம் - தற்போதையை நிலவரம்

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 02 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 707 ஆக அதிகரித்துள்ளது.

இன்று 12 கொரோனா நோயாளர்கள் குணமடைந்துள்ளனர். அதற்கமைய, குணமடைந்தோரின் எண்ணிக்கை 184 ஆக அதிகரித்துள்ளது.

15 கொரோனா நோயாளர்கள் நேற்று (02) அடையாளம் காணப்பட்டனர். அவர்களில் 12 பேர் கடற்படையை சேர்ந்தவர்கள் என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டார்.

516 கொரோனா நோயாளர்கள் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெறுகின்றனர். 179 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள சந்தேகத்தில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, 37 தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நிலையங்களில் 4505 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி குறிப்பிட்டார்.

இதுவரை 4950 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டதன் பின்னர் வீடு திரும்பியுள்ளதாகவும் 07 பேர் இன்று வீடு திரும்பவுள்ளதாகவும் 4110 பேர் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

No comments: