வழிபாட்டுத் தலங்கள் மீண்டும் எப்போது திறக்கப்படும் - அமைச்சு தகவல்

வழிபாட்டுத் தளங்களை மீண்டும் திறப்பது குறித்து அரசாங்கம் இன்னும் இறுதி முடிவை எட்டவில்லை என புத்தசாசனம், கலாசாரம் மற்றும் மத அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

காலை முதல் இரவு வரை அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டாலும் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக வழிபாட்டுத் தளங்கள் மூடப்பட வேண்டும் என அமைச்சின் மேலதிக செயலாளர் கூறினார்.

இதேவேளை போயா தினங்களிலும் பௌத்த ஆலயங்களை மூடி வைக்க அரசாங்கம் ஒரு முடிவை எடுக்கக்கூடும் என்றும் இது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.